garlic curry :செளராஷ்டிரா ஸ்டைல் பூண்டு குழம்பு செய்வது எப்படி?
உரித்த பூண்டு - ஒரு பெரிய கப் அளவு , குழம்பு மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன், புளி தண்ணீர் -ஒரு கப் , நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், தாளிக்க : கடுகு - ஒரு டீஸ்பூன் , வெந்தயம் - 14 டீஸ்பூன் , மிளகு - டீஸ்பூன் கால் டீஸ்பூன் , சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, அரைக்க : பூண்டு - நாலு பல் மிளகு - 1/4 டீஸ்பூன் சீரகம் 1/4 டீஸ்பூன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுளியை ஊற வைக்கவும். பின்னர், புளி தண்ணீரில் குழம்பு மிளகாய்த்தூளை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின்பு ஒன்றாகப் போட்டு தாளிக்கவும்.
உரித்த பூண்டுகளை சேர்க்கவும். பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். பின்னர் அதில் தயாரித்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
நன்கு கொதித்து, மிளகாய் பொடி வாசனை நீங்கி, எண்ணெய் பிரிந்து மேலே வரும்வரை கொதிக்க வைத்து இறக்கவும். அவ்வளவுதான். சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு தயார்.
இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் நல்ல சாய்ஸ். ருசியாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -