Unique Maggi Recipes: ஒரே மாதிரி மேகி செஞ்சு போர் அடிக்குதா? இதோ இருக்குது விதவிதமான ரெசிபிகள்!
மேகி என்பது ஒரு உணவு மட்டுமல்ல, அது ஒரு எமோஷன். பலருக்கும் எளிதில் கடந்து செல்ல முடியாத விஷயங்களில் ஒன்றாகும்.
மேகியை வித்தியாசமாக செய்ய இருக்கிறது நிறைய ஐடியா!
பர்ன்ட் கார்லிக் மேகி -
ஒரு பாத்திரத்தில் வறுத்த பூண்டை தயார் செய்து, ஒதுக்கி வைக்கவும். அதே கடாயில், அனைத்து பொருட்களையும் வதக்கி, மேகியுடன் இணைக்கவும். மேலே வறுத்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் தூவி இறக்கவும்.
மஞ்சோ மேகி
கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு, 1 கப் காய்கறிகள் , 1 டேபிள்ஸ்பூன் டார்க் சோயா சாஸ், 1 டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ், 1 டீஸ்பூன் வினிகர் 2 டேபிள்ஸ்பூன் சோளமாவு கலவை (1 டீஸ்பூன் சோளமாவு 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கலக்கப்பட்டது)
1 பாக்கெட் மேகி தண்ணீர் ஒரு கொதி நிலைக்கு வரும் வரை வேக வைக்கவும். ஒரு முறை சுவையை சோதனை செய்து, தேவைப்பட்டால் எந்த சாஸ் வேண்டுமோ சேர்த்து சரிசெய்யவும். சூடாக பரிமாறவும்.
டெசி மசாலா மேகி
வழக்கமாக மேஜி செய்யும்படிதான். இதுவும். காய்கறிகளையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அவற்றை முழுமையாக வதக்கவும். அடுத்து, மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். பிறகு மேகியை சேர்த்து தண்ணீர் சேர்க்கவும். இது நீங்கள் விரும்பும் நிலைத்தன்மைக்கு வரும் வரை வேகலாம். இறுதியாக சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.