Poha cutlet : சோர்ந்து இருக்கும் குழந்தைகளை குஷி படுத்த இருக்கவே இருக்கு போஹா கட்லெட்!
தினமும் பள்ளி சென்று சோர்வுடன் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்று குழம்பி போய் இருக்கிறீர்களா? இதோ இந்த தகவல் உங்களுக்கானது. தொடர்ச்சியாக பஜ்ஜி போண்டா சாப்பிட்டு அலுத்து போன குழந்தைகளுக்கு ஆரோகக்கியமான மற்றும் சுவையான போஹா கட்லெட் செய்து கொடுங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபோஹா கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது), சீஸ் - 1/4 கப் (துருவியது) , கேரட் - 1/4 கப் (துருவியது), உப்பு - தேவையான அளவு, மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் , கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், சாட் மசாலா - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், மைதா - 2 டீஸ்பூன், பிரட் தூள் - சிறிது, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
முதலில் அவலை நீரில் கழுவி, நீரை வடித்துவிட்டு, தனியாக 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு உருளை கிழங்குகளை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, ஊற வைத்த அவல், துருவிய கேரட், துருவிய பன்னீர், சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, மிளகாய் தூள், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அந்த கலவையை முதலில் உருட்டி பிறகு தட்டையாக தட்டி ஒரு தட்டில் வைத்துவிட வேண்டும்.பின் ஒரு பௌலில் மைதாவை எடுத்து, நீர் சேர்த்து லேசான பதம் கொண்ட பேஸ்ட்டாக்கி அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்
அடுத்து ஒவ்வொரு கட்லெட் துண்டுகளையும் எடுத்து, முதலில் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லெட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக முன்னும், பின்னும் பொரித்து எடுத்தால், போஹா கட்லெட் ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -