Mutton Gravy Recipe : மூக்கை துளைக்கும் பாட்டி வீட்டு ஸ்டைல் மட்டன் கிரேவி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : 500 கிராம் மட்டன் எலும்பு இல்லாதது, 4 பெரிய வெங்காயம் அரைத்த விழுது, 2 தக்காளி அரைத்த விழுது, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 காய்ந்த மிளகாய், ஒரு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மல்லி சீரகம், மிளகுத்தூள் அரைத்த பொடி, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு, 50 மிலி நல்லெண்ணெய், கொஞ்சம் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : மட்டன் துண்டுகளை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் போட்டு பச்சை மனம் போகும் வரை வதக்கவும்
நன்கு வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி விழுதை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். நன்றாக வதங்கிய பின் கழுவி வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
10 நிமிடங்கள் நன்றாக கிளறிய பிறகு மல்லி, சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கிளறிவிடுங்கள். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறிவிடவும்
அதன் பிறகு சிறு தீயில் குக்கரை வைத்து, 5-6 விசில் விட்டு இறக்கினால் சுவையான பாட்டி வீடு மட்டன் கிரேவி ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -