Banana Peel Face Packs:சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழைப்பழ தோல் Face Pack!
வாழைப்பழ தோல், தேன் சருமத்தை புத்துணர்சியுடன் வைக்க உதவும். இதிலுள்ள பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது சருமத்தின் மாயிஸ்ட்ரை தக்கவைக்க உதவும். வாழைப்பழ தோலில் உள்ள பேஸ்டை எடுத்து அதில் தேன் சேர்த்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இது சருமத்தை மிருதுவாக்க உதவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுகப்பரு, கொப்பளங்களினால் ஏற்படும் தழும்புகள் ஆகியவற்றை போக்க இந்த ஃபேஸ் பேக் உதவும். வாழைப்பழ தோலில் உள்ள ஜெல்லை எடுத்து, அதோடு, மஞ்சள், ரோஸ் வாட்டர் சேர்த்து முகம்,. கழுத்திற்கு தடவலாம். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவலாம். வாரம் இரு முறை இப்படி செய்தால் சரும எரிச்சல், முகப்பரு ஆகிய பாக்டீரியல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வாழைப்பழ தோலில் ஆன்டி - ஆக்ஸிடண்ட், வைட்டமின், மினரல்ஸ் நிறைந்துள்ளன. இது சருமத்தை புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.
வாழைப்பழ தோல் உடன் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்திற்கு தடவி வந்தால் சரும் மிருதுவாகும். அதோடு, சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். சருமம் பொலிவாக மிளிர வாரத்திற்கு இருமுறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -