Coffee: ஒரு நாளைக்கு எத்தனை கப் காஃபி குடிக்கலாம் ?இதை கவனிங்க மக்களே!
ஒரு நாளைக்கு கணக்கு இல்லாமல் டீ,காஃபி குடிப்பவரா?கொஞ்சம் நிபுணர்களின் அறிவுரையை கேளுங்க. டீ அல்லது காஃபி அதிகளவு அருந்துவதால் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) பாதிக்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடலுக்கு இரும்புச் சத்து தேவை என்பவர்கள். சாப்பாட்டிற்கு முன்பும் சாப்பிடதற்கு பின்பும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு டீ, காஃபி குடிக்க கூடாது என்றும் அதிகளவில் பால் சேர்த்த டீ,காஃபி குடிக்க வேண்டாம் என்றும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை கப் காஃபி குடிக்கலாம்; ஏன் அதிகமாக குடிக்க கூடாது என்பது குறித்து விளக்கமளித்த ஊட்டச்சத்து நிபுணர்,” டீ,காஃபில் உள்ள சில எலமெண்ட்ஸ் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. அதன் காரணமாகவே ஐ.சி.எம்.ஆர். சமீபத்தில் வழிகாட்டுதல் அறிவுரைகளை வழங்கியிருந்தது. சாப்பிடுவதற்கு முன்பாகவோ, பிறகோ டீ,காஃபி குடிப்பதால் உணவிலுள்ள சத்துகள் உறிஞ்சப்படுவதில்லை. அதனாலேயே சாப்பிடுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும் பின்னரும் டீ, காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.” என்று அறிவுறுத்துகிறார்.
காலையில் எழுந்ததும் முதலில் உணவுப் பொருளாக டீயோ காஃபியோ குடிப்பதே பல ஆண்டுகளாக நம் வழக்கமாக உள்ளது. ஆனால், காலை வெறும் வயிற்றில் டீ,காபி குடிக்க கூடாது. காலையில் எழுந்ததும் உடலில் ஹார்மோன் சுரப்பு நிகழும். அப்போது டீ, காஃபி குடித்தால் அது ஹார்மோன் சுரப்பை பாதிக்கும். ஆகவே, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு மணி நேரத்திற்கு பிறகே காஃபி குடிப்பது உகந்தது.’ என்று வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்
மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றில் சிரமத்தை எதிர்கொள்பவர்கள் மாலை 4 மணிக்கு மேல் டீ,காஃபி குடிக்க கூடாது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.. அதிலுள்ள காஃபின் தூக்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். அதோடு, ஒரு நாளைக்கு 2-3 கப் டீ,காஃபி குடிப்பது பரிந்துரைப்படுகிறது. இது பொதுவான தகவல் மட்டுமே. நிபுணர்கள் தெரிவித்த கருத்துகள் மட்டுமே.