Skin Care : முகம் பொலிவுடன் இருக்க வீட்டிலேயே ஃபேஷியல் மாஸ்க் தயாரிக்கலாம்!
முக பராமரிப்பு என்பது மிகவும் அவசியமானது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை Peel Off மாஸ்க் போடுவது நல்லது. கடைகளில் கிடைக்கும் பீல் ஆஃப் மாஸ்க் பயன்படுத்துபவராக இருப்பின் அதோடு இயற்கையான பொருட்களை சேர்க்கலாம்.
தக்காளியை நன்றாக அரைத்து விழுதாக்க வேண்டும். ஜூஸ் செய்து அதோடு காஃபி பவுடர் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு தேவையான அளவு தயாரிக்கலாம். சிறிதளவு செய்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனால், ரொம்ப காலத்திற்கு இருக்காது. அது குறுகிய காலத்திலேயே கெட்டு போய்விடும்.
சிறிதளவு தக்காளி ஜூஸ், காஃபி பவுடர் அதோடு கடையில் கிடைக்கும் Peel Off மாஸ்க் லிக்விட் எல்லாவற்றையும் நன்றாக கலந்து முகம், கழுத்து ஆகியவற்றில் மாஸ்காக போடலாம். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக முகத்தை கழுவவும்.
வாரத்திற்கு ஒரு முறை முல்தானி மிட்டி, கடலை மாவு, தயிர் என முகத்திற்கு மாஸ்க் செய்து போடலாம். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை ஆவி பிடிப்பது அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை வைத்து எடுப்பது, ஐஸ் கட்டி மசாஜ் என கொடுப்பது சரும பராமரிப்பிற்கு மிகவும் நல்லது.