Kollu Thuvaiyal : சத்தான கொள்ளு துவையல் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : கொள்ளு - 125 கிராம் , எண்ணெய் - 2 தேக்கரண்டி , கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 15 , பூண்டு - 7 பற்கள், புளி, துருவிய தேங்காய் - 1/2 மூடி , கல்லுப்பு - 1 தேக்கரண்டி , பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி , தண்ணீர், எண்ணெய் - 3 தேக்கரண்டி , கடுகு ,சீரகம் , கறிவேப்பிலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் கொள்ளு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து வறுக்கவும்.5 நிமிடத்திற்கு பிறகு காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து வறுக்கவும்.
அதன் பிறகு துருவிய தேங்காய், உப்பு சேர்த்து வறுக்கவும். அடுத்தது பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறவைத்த மசாலாவை மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அதன்பிறகு தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
கடைசியாக தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து தாளிப்பை துவையலுடன் சேர்த்தால் சுவையான கொள்ளு துவையல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -