✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Desk Work : மணிக்கணக்கா உட்காந்தே வேலை பாக்கும் சூழலா? இதை கொஞ்சம் படிங்க!

ஜான்சி ராணி   |  29 Jun 2024 09:25 AM (IST)
1

இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலும் கணினி சார்ந்த வேலையாக இருப்பது அதிகரித்துவிட்டது. கேஜட்ஸ் இல்லாமல் ஒரு நாளும் முடிவதில்லை.  அவர்களின் வாழ்க்கை முறை செடன்ட்ரி எனப்படும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையாகவே இருக்கிறது. இது உடல்நலத்திற்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

2

2 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது சிகரெட் புகைப்பதைவிட அதிகமாக கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள்  எச்சரித்துள்ளனர். இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தால் உங்களின் உடல் தோரணையில் சிக்கல் ஏற்படும்.

3

இதனால் சர்க்கரை நோய், இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படலாம். உடல் முழுவதுமான நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாகும்.  ஸ்டிஃப்நெஸ் எனப்படும் நிலை உருவாகலாம். எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

4

இது தொடர்பாக மருத்துவர் பிரியங்கா கூறுகையில், “இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்திருந்தால் உடலில் உள்ள சக்தி பயன்படுத்தப்ப்படாமல் வளர்சிதை மாற்றம் குறையும். ஊட்டச்சத்துகள் பயன்படுத்தப்படாமல் போகக் கூடிய நிலையை உருவாக்கும். நம் உடலில் ஊட்டச்சத்துகள் சரியாக பயன்படுத்தப்படாமல் போகும்போது அவை கல்லீரலில் தேங்கிவிடும்.” என்று தெரிவிக்கிறார்.

5

நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை பார்த்தால் நமது நுரையீரல் குறைவாக வேலை செய்யும். அதனால் சுவாசிக்கும் திறன் குறையும்.ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 2 அல்லது 3 நிமிடங்கள் எழுந்து நடக்கவும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதேனும் சிறிய உடற்பயிற்சி செய்வதும் நலம். காலையில் எழுந்தவுடன் ஒரு சிறு தூராமவது நடந்து வரவும். 80 நிமிடங்கள் வேலை 2 நிமிடங்கள் நடை என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Desk Work : மணிக்கணக்கா உட்காந்தே வேலை பாக்கும் சூழலா? இதை கொஞ்சம் படிங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.