Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Skin care: பளபளப்பான சருமத்திற்கு வைட்டமின் E எவ்வளவு முக்கியம்? தெரிஞ்சிக்கோங்க!
சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் E (Vitamin E) முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருப்பதால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவைட்டமின் E சருமத்தை ஈரப்பத்துடன் பராமரிப்பதுடன், சருமம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும், நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது.
இதனால்தான், சன் ஸ்கிரீன் லோஷன் அல்லது கிரீம் உள்ளிட்டவைகளில் வைட்டமின் E இருப்பதை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது உங்களது சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
இயற்கையாக உணவு முறை, ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கியமான சருமம் சிரிக்கும்.
வைட்டமின் E முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு. உச்சந்தலையில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்க உதவும். தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் E எண்ணெய் அல்லது வைட்டமின் E காப்சியூல் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -