Morning Walking: ஃபிட்னஸ் உங்க சாய்ஸா? காலை நடைபயிற்சி செய்வதில் இத்தனை நன்மைகளா?

அதிகாலை அல்லது சூரியன் உதயமாகும்போது எழுந்திருப்பது உடலுக்கு நல்லது. அந்த நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பல.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
காலையில் நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடையை குறைக்க முடியும். தினமும் காலையில் 30 நிமிடங்கள் வரை நடைபயிற்சி செய்தால் 150 கலோரிகளை குறைக்கலாம்.

காலையில் உணவு எடுத்து கொள்ளாமல் நடைபயிற்சி செய்வதால், ஆற்றலுக்காக உடலில் உள்ள தேவையற்ற கரைந்து உடல் எடையை குறைக்கும்.
image 7
காலை நடைப்பயிற்சி நினைவாற்றலை அதிகரிக்க உதவும். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் காலையில் செய்யும் நடைப்பயிற்சியால் மூளையில் நினைவாற்றலை தக்கவைத்து கொள்ளும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதி விரிவடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சியை கடைப்பிடித்து வந்தால் மனதில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். மனதும், உடலும் ஆரோக்கியமாக இருப்பதை உணர்வதால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கை தோன்றும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -