Green Fish Tandoori: பச்சை மீன் தந்தூரி..வீட்டிலேயே செய்வது எப்படி? ரெசிபி இதோ!
மீன்களை துண்டுகளாக வெட்டாமல் முழு மீனாக சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.மீன் தந்தூரிக்கு தேவையான மசாலாவை செய்து கொள்ளலாம். மிக்சி ஜாரில் எடுத்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லி, 5 பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கப் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா பொடி, மிளகு தூள், சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவை எடுத்து கொள்ள வேண்டும்.
சுத்தமாக கழுவி வைத்துள்ள மீன்களில் அந்த மசாலாவை நன்றாக தடவி விட்டு ஒரு மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். அப்பொழுது தான் மசாலா பொருட்கள் மீனில் ஊறி அதன் சுவை கூடுதலாக இருக்கும்.
மீனை துண்டாக அறுக்காமல் செய்வதால் அதன் மேற்புறங்களில் கீறி விட வேண்டும். அப்பொழுது தான் மீனிற்கு உள் பகுதியிலும் மசாலா சென்றடையும்.
தந்தூரி மசாலாவில் நன்றாக ஊறியதும், அடுப்பை பற்ற வைத்து அதன் மீது கம்பி ரேக்கை வைக்க வேண்டும். கம்பி ரேக் சூடானதும், அதன் மீது மசாலா தடவி வைத்துள்ள மீனை வைத்து சூடாக்க வேண்டும்.
10 நிமிடங்களுக்கு பிறகு கீழ் புறத்தை மேல்புறமாகவும், மேல் புறத்தை கீழ்ப்புறமாகவும் திருப்பி வைத்து மீனை வேக வைக்க வேண்டும். அடுப்பின் தீ அதிகமாக இருக்க கூடாது.
பச்சை மீன் தந்தூரி நன்றாக வெந்ததும் அதை எடுத்து பிளேட்டில் வைத்து விட வேண்டும். அதனுடன் வெங்காய துண்டுகள், எலுமிச்சை துண்டுகள் வைத்து பரிமாறலாம்.
மீன் ரெடியாகும் போதே அதன் மீது வெண்ணய் தடவலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -