Peanut Barfi: இனி கடைக்கு போக வேண்டாம்... கடலை மிட்டாய்- வீட்டிலேயே செய்து அசத்துங்க..!
வேர்க்கடலையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தோல் நீக்கி மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, கம்பி பாகு பதம் வந்தவுடன், அதில் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்து கிளற வேண்டும்.
வேர்க்கடலை கலவையில் சிறிது சிறிதாக நெய் சேர்த்தபடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்து தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் கலந்து, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் துண்டுகளாக்கி பரிமாறலாம். தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி தயார்.
சர்க்கரை பாகு தயாரிக்க இரு பங்கு சர்க்கரைக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை நன்கு உருகி நுரை நுரையாக கொதித்து வரும். இப்போது ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை பாகை ஒரு கரண்டியில் சிறிதளவு எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் , ஒரு துளியை விட வேண்டும். சர்க்கரை கரைசல் கரையாமல் நீருக்கடியில் சென்று முத்துப்போன்று நின்று விட்டால் பாகு பதம் வந்துவிட்டது என்று அர்த்தம்.