Health: கணினி முன்னாடி மணிக்கணக்கா உட்காந்து வேலை பாக்குறீங்களா? இதைப் படிங்க!
நாம் ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்போம் என்றால் நாம் ஒரு சிகரெட் புகைப்பதைவிட அதிகமான கேட்டை நம் உடலுக்குச் செய்கிறோம் என்று அந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமருத்துவர் பிரியங்கா கூறும்போது, இரண்டு மணி நேரம் ஓரே இடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்திருந்தால் நம் உடலில் உள்ள சக்தி பயன்படுத்தப்படாது. அதனால் வளர்சிதை மாற்றம் குறையும். குறைந்த வளர்சிதை மாற்றம் என்பது உடலில் சேர்ந்த ஊட்டச்சத்துகள் பயன்படுத்தப்படாமல் போகக் கூடிய நிலையை உருவாக்கும்.
அதிகப்பட்டியான குளுக்கோஸ் ஃபேட்டி லிவரை உருவாக்கும். வயது ஏறஏற வளர்சிதை மாற்றம் உடலில் குறையும். அதில் நாம் அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் இன்னும் பல நோய்கள் நம்மை வந்து சேரும்.
சராசரியாக ஒரு மனிதன் தனது நுரையீரல் செயல்பாட்டுத் திறனில் பாதியைத் தான் உபயோகப்படுத்துகிறார். அப்படியிருக்கு அதைக்குட நாம் பயன்படுத்தாவிட்டால் அது இன்னும் குறைந்து முற்றிலுமாக செயலிழக்கும்.
தொடர்ச்சியாய் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் கொழுப்பைக் கரைக்கும் நொதிகள் சுரப்பது குறையும். கெட்ட கொழுப்பு எரியாமல், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். உட்கார்ந்து வேலை செய்வது வருடக் கணக்கில் தொடர்ந்தால், எலும்பு வளர்ச்சி குறையவதோடு, அடர்த்தியும் குறையும்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 2 அல்லது 3 நிமிடங்கள் எழுந்து நடக்கவும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதேனும் சிறிய உடற்பயிற்சி செய்வதும் நலம். காலையில் எழுந்தவுடன் ஒரு சிறு தூராமவது நடந்து வரவும். 80 நிமிடங்கள் வேலை 2 நிமிடங்கள் நடை என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -