Cleaning Tips : பாத்ரூம், சின்கில் உள்ள குழாய்கள் பளபளவென ஜொலிக்க டிப்ஸ்!
தண்ணீரில் இருக்கும் கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் சிங்க், பாத்ரூம்களில் கரையாக படிந்து விடுகின்றன. அது பார்ப்பதற்கு அசுத்தமாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிங்க், குழாய்களில் உள்ள கறைகளை சோப்பு , டிஷ் வாஷிங் லிக்விடுகள் வைத்து கழுவினாலும் புதிது போல ஜொலிக்காது. பளபளப்பாக மாறுவதற்கு சில பொருட்களை சேர்த்து தேய்க்க வேண்டும். அப்போதுதான் விடாப்பிடி கறைகள் நீங்கும்.
அழுக்குகளை போக்க பேக்கிங் சோடா சிறந்த வழியாகும். பேக்கிங் சோடாவில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கிக்கொள்ளவும். பின், குழாயை சுற்றி தடவிவிட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்து விட்டு நாரை கொண்டு தேய்த்தால் குழாய்கள் புதிதாக மாறும்.
எலுமிச்சையை குழாயின் மேல் பிழிந்து ஊற வைத்து 20 நிமிடத்திற்கு பின் பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு நன்கு தேய்க்க, கறைகள் நீங்கும்.
வெது வெதுப்பான நீரில் ஒரு மூடி வெள்ளை வினிகர் சேர்த்து, பின் காட்டன் துணியில் இந்த கலவையை நனைத்து குழாயை சுற்றிலும் மூடி விடுங்கள். 10 நிமிடத்திற்கு பிறகு நார் கொண்டு தேய்த்தால் சுண்ணாம்பு கறைகள் கரைந்து சின்க் ஜொலிக்கும்.
குழாய்களை எப்போதாவது கழுவுவதை விட அவ்வப்போது கழுவி சுத்தம் செய்வது நல்லது. டிஷ் வாஷிங் சோப் கொண்டு குளிக்கும் போதோ அல்லது சிங்க் பயன்படுத்தும் போதோ கொஞ்சம் நேரம் ஒதுக்கி கழுவினால் குழாய்கள் புதிது போல் இருக்கும். குழாய்களை எப்போவதாவது கழுவுவதை விட வாரம் ஒரு முறை சுத்தம் செய்யலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -