Summer Care : ஐஸ்கிரீம், ரோஸ் மில்க் அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
கோடை வெயில் வந்துவிட்டால் உடனே குளிர்ச்சியை தேடி ஓடுவார்கள். வெயிலை சமாளிக்க குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு, ஐஸ்கிரீம்களை ஆசைக்காகவும் வாங்கி கொடுக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆசைக்காக ஒரு நாள் சாப்பிடலாம். தொடர்ச்சியாக சாப்பிட்டால், தொண்டை வலி, சளி, காய்ச்சல் போன்ற உடல் நல பிரச்சினைகள் ஏற்படலாம். இதை சாதாரணமாக அலட்சியப்படுத்தக் கூடாது.
தொண்டை வலி ஏற்பட்டு அலட்சியப்படுத்தினால் ருமாட்டிக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது, இதயம், மூட்டுகள், சருமம் மற்றும் மூலையை பாதிக்க கூடிய நோயாகும் .நோய் தொற்று ஏற்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் இதய பாதிப்புடன், சிறு நீரக பாதிப்பும் ஏற்படலாம்.
குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டாம்.ஒரு வேலை உங்கள் குழந்தைக்கு லேசான காய்ச்சலோ, தொண்டை வலியோ வந்தால் உடனடியாக மருத்துவரை நேரில் அணுகவும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -