✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Coconut Milk Pudding : தேங்காய் பாலில் சாஃப்டான புட்டிங்..இப்படி செய்து அசத்துங்க!

சசிகலா   |  18 Apr 2024 04:05 PM (IST)
1

2 கப் தேங்காய் துருவலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதனுடன் 2 ஏலக்காய், இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தேங்காய் பாலை ஒரு கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். 

2

ஒரு பாத்திரத்தை எடுத்து, வடிகட்டிய தேங்காய் பாலில் முக்கால் பாகம் அளவு தேங்காய் பாலை இந்த பாத்திரத்தில் சேர்க்கவும். மீதி பாலை வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3

முக்கால் பாகம் தேங்காய் பால் எடுத்துள்ள பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை ,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு கரண்டியால் கலந்து விட்டு இதை தனியே எடுத்து வைத்து விட வேண்டும். கால் கப் தேங்காய் பால் வைத்துள்ள பாத்திரத்தில் கால் கப் சோள மாவை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

4

முக்கால் பாகம் பால் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தீயை மிதமாக வைத்து வேக விட வேண்டும். லேசாக கொதி வந்தவுடன், கரைத்து வைத்துள்ள சோளமாவை இத்துடன் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடம் தொடர்ந்து கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

5

இந்த ஸ்டேஜில் உங்களுக்கு தேவைப்பட்டால் மேலும் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.  இப்போது இந்த கலவை  வெண்ணெய் போல் திரண்டு வரும்.

6

இப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது மூடி உள்ள ஒரு கண்ணாடி பாக்ஸை எடுத்து இந்த கலவை சூடாக இருக்கும் போதே இதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.  சூடு ஆறியதும் இதை மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரத்திற்கு பின் எடுத்து கத்தியால் வெட்டி பரிமாறலாம். இதன் சுவை அபாரமாக இருக்கும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Coconut Milk Pudding : தேங்காய் பாலில் சாஃப்டான புட்டிங்..இப்படி செய்து அசத்துங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.