Winter Food diet : பனி காலத்தில் உடல் சுறுசுறுப்பாக இருக்கணுமா? நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிம்பிள் டயட் இதோ!
பனிகாலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதை இங்கு டயட் சார்டாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்றை சாப்பிட்டு வரலாம்
காலையில் எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். கிட்டதட்ட 250 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மலாசனா எனும் யோகா போஸில் குடிப்பது சிறப்பு.
8 மணி அளவில் நெல்லிக்காய் சாறில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். 9:30 மணிக்கு காலை உணவாக இரண்டு தோசை அல்லது இரண்டு இட்லி, அதற்கு சாம்பார், சட்னி வைத்து சாப்பிடலாம். அவல் உப்புமாவை செய்து சாப்பிடலாம். சப்பாதியில், வதக்கிய சத்தான காய்கறிகளை வைத்து சாப்பிடலாம்
12 மணி அளவில் ஏதேனும் பழவகையை சாப்பிடலாம். கமலா ஆரஞ்சுச், கொய்யா, அண்ணாசி, மாதுளை சாப்பிடலாம்
1:30 மணி மதிய உணவுக்கு பழுப்பு அரிசி சாதம், அதற்கு ஏதாவது குழம்பு, பொரியல் சாப்பிடலாம். தூய மல்லி அரிசியை வடித்து சாப்பிடலாம், மாப்பிள்ளை சம்பா அரிசியில் கிச்சடி செய்து சாப்பிடலாம். அதற்கு பின், உலர் பழங்களை வைத்து செய்யப்படும் லட்டுவை சாப்பிடலாம். இதில், பேரீச்சை, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
4 மணிக்கு சியாவிதைகள், உலர் பழங்களை பாலில் சேர்த்து குடிக்கலாம். 7:30 மணிக்கு, சப்பாத்தியுடன் காய்கறிகள், கஞ்சி, சூப் வகைகள், இட்லி சாப்பிடலாம். (இவை அனைத்தும் நிபுணர்களின் பரிந்துரைதான். எப்போதும் அளவாக சாப்பிடுவதே நல்லது. ஒவ்வொரு நபருக்கும் இது வேறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது)