Diabetic Friendly Snacks : சர்க்கரை நோயாளிகளே.. பயந்து பயந்து சாப்பிடுகிறீர்களா? அப்போ முதலில் இதை படிங்க!
அனைவருக்கும் காலையிலோ மாலையிலோ ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகளால் சில உணவுகளை சாப்பிட முடியாத சூழல் இருக்கும். தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு உரிய ஸ்நாக்ஸ் வகைகளை பற்றி இங்கு பார்ப்போம்
ஒரு கப் தயிரை சாப்பிடலாம். அதற்கு பதிலாக யோகர்ட் கூட சாப்பிடலாம். இவை குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அத்துடன் இதில் கால்சியம் சத்தும் நிறைந்து இருக்கும்.
மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, கிவி, செர்ரி, தர்பூசணி ஆகிய பழங்களை முழுவதுமாக அப்படியே சாப்பிடலாம்
முட்டைகளில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. இதை அப்படியே வேக வைத்து சாப்பிடுவதுதான் நல்லது. வேக வைத்த முட்டையில் மிளகு தூள் சேர்த்து கொள்ளலாம்.
முளை கட்டிய பயிறு வகைகளை சாப்பிடலாம். இதன் சுவையை கூட்ட, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு கலந்து சாலட்டாக சாப்பிடலாம்
கொண்டை கடலையில் செய்யப்படும் ஹம்மஸை எடுத்துக்கொள்ளலாம். இத்துடன் கேரட், வெள்ளரி ஆகிய காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம். முன் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டால், தேவையில்லாத பசி ஏற்படாது. உடலுக்கும் எந்த பிரச்சினையும் வராது. அனைத்தையும் அளவாகதான் சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.