வாழைப்பழம் பிரெஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும்?தெரிஞ்சிக்கோங்க!
வாழைப்பழம் ஏராளமான ஊட்டச்சத்து மிகுந்தது. பொட்டாசியம் நிறைந்த வாழப்பழத்தை தினமும் சாப்பிடலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வாழைப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின்,நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும். தசை வளர்ச்சிக்கு வாழைப்பழம் உதவும். அன்றாடம் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கு வாழைப்பழத்தில் கிடைக்கும். வாழைப்பழம் பிரெஷ்ஷாக இருக்கிறதா, அதை எப்படி ஸ்டோர் செய்வது உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க அலுமினியம் ஃபாயில் ஷீட்டில் அதன் தண்டுகளை சுற்றி வைக்கலாம். வாழைப்பழத்தில் கருப்பு திட்டுகள் ஏற்படாமல் இருக்கும்.
வாழைப்பழத்தில் கயிற்றில் தொங்க விட்டு வைப்பதால் அது பிரெஷ்ஷாக இருக்க உதவும். மேடை மீது வைப்பது, கண்ணாடி குடுவை, பிளாஸ்டிக் டப்பா உள்ளிட்டவற்றில் வைக்காமல் இருப்பது நல்லது.
வாழைப்பழத்தை ப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். குளிரான வெப்பநிலை வாழைப்பழம் அழுவிடும் வாய்ப்பை அதிகப்படுத்தும். வாழைப்பழம் வாங்கும் போது ஒரு சீப் வாங்கி வைப்போம். இரண்டு மூன்று நாட்களிலேயே வாழைப்பழம் நன்கு பழுத்து பின் அழுகியும் விடும். இதனால் வாழைப்பழம் வீணாகி விடும். இப்படி ஆகாமல் வாழைப்பழம் ஃப்ரெஷ்ஷாக இருக்க இதை பண்ணுங்க.