✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

பூண்டு பிரெஷ்ஷா இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்.. தெரிஞ்சிக்கோங்க!

ஜான்சி ராணி   |  29 Sep 2024 12:19 AM (IST)
1

பூண்டு குறைந்த கலோரி கொண்டது. ஒரு பல் பூண்டு அல்லது மூன்று கிராம் பூண்டில் 4.5 கலோரி இருக்கும். 0.2 கிராம் புரோட்டீன் கொண்டது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சளி உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படாமல் இருக்க உதவும். இதய பாதிப்புகள் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது.இது உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களு உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

2

பூண்டில் உள்ள எக்ஸ்ட்ரா தோல் நீக்கி அதை வெயிலில் உலர்த்தி காற்றுப்புகாத டப்பாவில் வைக்க வேண்டும். பூண்டு தோல் நீக்கி ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை காற்றுப்புகாத டப்பாவில் வைக்க வேண்டும். ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை செல்பவராக இருந்தால் ஒரு வாரத்திற்கு தேவையான பூண்டை தோல் நீக்கி டப்பாவில் ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இஞ்சி -பூண்டு பேஸ்ட் தயாரித்தும் வைத்தால் சமையல் செய்யும் நேரம் குறைந்துவிடும். 

3

ஜுட் பைகளில் பூண்டு வைப்பது நல்லது. தேவையான அளவு காற்றோட்டம் இருக்கும். இது பூண்டு ஃப்ரெஷ் ஆக இருக்க உதவும்.  காட்டன் பைகளில் கூட வைக்கலாம். காட்டன் துணியை ட்ரேயில் வைத்து அதில் பூண்டு ஸ்டோர் செய்வது ஃப்ரெஷ் ஆக இருக்க உதவும். குளிர் அதிகம் இருக்காத பகுதிகளில் வைக்கவும். குறைந்த ஒளி இருக்கும் இடத்தை தேர்வு செய்வது நல்லது. 

4

காற்று புகாத டப்பாவில், பூண்டு வைப்பது சீக்கிரம் கெட்டுவிடும் வழக்கம் உண்டு. கடையில் இருந்து பூண்டு வாங்கிவிட்டு வந்தவுடன் அதை பிளாஸ்டிக் கவரிலேயே வைப்பதை தவிர்க்கவும். 

5

தினமும் சமையலில் பூண்டு சேர்க்கும் பழக்கம் இருந்தால் பூண்டை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி அதை விழுதாக அரைக்கவும். இதை ஒரு டப்பாவில் வைத்தால் பூண்டு விழுதை தேவையான உணவுகளை சேர்க்கலாம். நேரமும் மிச்சமாகும். பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி டப்பாவில் வைப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. இதை ஒரு வாரத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒயிட் வினிகர் சேர்க்க மறந்துவிட வேண்டாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • பூண்டு பிரெஷ்ஷா இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்.. தெரிஞ்சிக்கோங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.