Honey Purity Check : நீங்க பயன்படுத்தும் தேன் சுத்தமானதா? தெரிந்து கொள்ள இதை செய்து பாருங்க!
இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட தேனில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட தேன் எளிதாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. அவை, நிஜமாகவே தேனா? அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்த கேள்விக்கான விடையை கண்டிபிடிக்க 6 வழிகள் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கிளாஸில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். இதில் சிறிதளவு தேனை ஊற்றவும். தேன் கரையாமல் இருந்தால், அது சுத்தமான தேன். கரைந்தால், அது நல்ல தேன் அல்ல.
வெள்ளை பேப்பர் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் தேனை சிறிது வைக்க வேண்டும். அந்த தேன் அப்படியே இருந்தால் அது நல்ல தேன். கலப்படமான தேன், பேப்பரால் உறிஞ்சப்படும். அத்துடன் பேப்பரை ஈறமாக்கும்.
கட்டை விரலில் ஒரு சொட்டு தேனை விட வேண்டும். அப்போது, தேன் கெட்டியாகவும், பிசுபிசுப்பாகவும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதில் தண்ணீர் வடிந்தால், அது கலப்படமான தேன் என்று அர்த்தம்
கொஞ்சம் தேனை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்ய வேண்டும். சுத்தமான தேன், கேரமலைஸ் ஆக வேண்டும். அத்துடன் கேரமல் வாடையும் வரும். அதற்கு பதில், தேன் நுரை கட்டினாலோ, தீய்ந்து போனலோ அது நல்ல தேன் நல்ல.
நல்ல தேனில் நல்ல நறுமணம் வரும். அத்துடன் அதன் சுவையும் நன்றாக இருக்கும். நாட்கள் செல்ல, தேன் ஐஸ் கட்டி போல் உறைந்துவிடும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -