Silk Saree Identification : அசல் பட்டு புடவையை கண்டுபிடிப்பது எப்படி?
அசல் பட்டு துணி ப்ளீச்சிங் கலவையில் முற்றிலுமாக கரைந்துவிடும். பாலிஸ்டர் மற்றும் பொலியான பட்டு துணியை ப்ளீச் செய்தால் எந்த மாற்றமும் இருக்காது
அசல் பட்டில் தீ பற்றிக்கொண்டால், முடி எரிவது போன்ற வாடை வரும். தீயில் எரிந்த துணியை கசக்க முடியாது. அது சாம்பலாக மாறாது. தீ பற்றினால் மெதுவாக எரியும். தீயை அணைத்துவிட்டால் அப்படியே அணைந்துவிடும்.
பொலியான பட்டு துணி எரியும் போது ப்ளாஸ்டிக் வாடை வரும், பளாஸ்டிக் எரிந்து உருகுவது போல் உருகும். தீ பற்றினால் அதை அணைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்
அசல் பட்டை விரல்களை பயன்படுத்தி தேய்த்தால் இதமாக இருக்க, பொலியான பட்டை தேய்த்தால் அது போல் இருக்காது.
அசல் பட்டை பார்க்கும் போது ஒவ்வொரு கோணங்களிலும் ஒவ்வொரு நிறத்தில் தெரியும். போலியான பட்டுத்துணியை எங்கு இருந்து பார்த்தாலும் ஒரே போல்தான் தெரியும்
அசல் பட்டை வணங்க வைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். பொலியான பட்டை எளிதாக மடித்துவிடலாம்