Brinjal Kaarakulambu : மணக்க மணக்க கத்தரிக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 4 , நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 1/2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2 , வெங்காயம் - 1 , கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் - 25 , பூண்டு - 25 பற்கள், தக்காளி - 1, உப்பு - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி, தண்ணீர், புளி கரைசல் - 1 கப், வெல்லம் - 1 தேக்கரண்டி.
செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் வறுக்கவும். அதன் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
அடுத்தது கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும, அதன் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து பச்சை மணம் நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்தது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சாம்பார் பொடி சேர்த்து கலந்துவிடவும். பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலாவை வேகவிடவும்.
அடுத்தது புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து ஊற்றி நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து கடாயை மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
அடுத்தது சிறிதளவு வெல்லம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கத்தரிக்காய் காரக்குழம்பு தயார்.