Coconut Rava Laddu : தித்திக்கும் தேங்காய் ரவா லட்டு.. விசேஷ நாட்களில் செய்து அசத்துங்க!
தேவையான பொருட்கள் : நெய், முந்திரி - 2 மேசைக்கரண்டி, திராட்சை, ரவை - 250 மி.லி , துருவிய தேங்காய் - 2 கப், சர்க்கரை - 3/4 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை : முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் மீண்டும் நெய் சேர்த்து ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் கடாயில் நெய் சேர்த்து துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதன் பின் வறுத்த ரவையை சேர்த்து தேங்காயுடன் நன்கு கிளறி விடவும்.
அடுத்தது சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும். அதன்பின் 2 நிமிடம் பிறகு பாலை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.
அடுத்தது நெய், ஏலக்காய்த்தூள், வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
அதன்பிறகு உள்ளங்கையில் நெய் தடவி ரவையை உருண்டை பிடித்தால் சுவையான தேங்காய் ரவா லட்டு தயார்.