Side Effects of Sitting : நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தால் என்னாகும் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. ஒரு நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பலரும் அறிவதில்லை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் உடல் பருமன், முதுகுவலி முதல் இதய நோய்கள், நீரிழிவு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம்.
நீடித்த மணிநேரம் உட்கார்ந்திருப்பதால் தசைகள் செயலிழந்து, பலவீனமாகும். கூடுதலாக, மோசமான முதுகுவலி மற்றும் ஹெர்னியேட்டட் டிஸ்க்குகள் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
நீண்ட மணிநேரம் உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளை பாதிக்கலாம். இறுதியில் டைப் 2 நீரிழிவு அபாயம் கூட ஏற்படலாம்.
வேலை நேரங்களுக்கு இடையில் பிரேக் எடுப்பதன் மூலம் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பது போன்ற பழக்கங்களை பின்பற்றுங்கள்.
உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -