Iodised Salt : அயோடின் உப்பா, கல் உப்பா? இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா?
அயோடின் உப்பு, கல் உப்பு, இந்து உப்பு என மார்க்கெட்டில் நிறைய வகை வகையான உப்பு மார்க்கெட்டில் வந்துவிட்டன. இப்போது மக்களுக்கு குழப்பம் இதில் எந்த உப்பை சாப்பிட வேண்டும் என்பதுதான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅனு அஹுஜா சமூக வலைதளங்களின் தாக்கத்தில் இருக்கிறார். ஐயோடின் ஏதோ வேண்டாத மினரல் என நிறைய பேர் கருதுகின்றனர். உண்மையில் சோடியம் தான் நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மினரல்.
சோடியம் எல்லாவிதமான உப்புக்களிலும் இருக்கிறது. ஆனால் ஐயோடின் ஐயோடைஸ்டு உப்பில் மட்டும் தான் இருக்கிறது. அது தைராய்டு அளவைக் காக்க அவசியமானது.
அரசாங்கம் ஏன் உப்பில் அயோடின் சேர்த்து அயோடைஸ்டு உப்பு என்று கொடுக்கிறது என யோசித்திருக்கிறீர்களா? ஏனெனில் உப்பு தான் எல்லா வீட்டிலும் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருள். விலை மிகமிக குறைந்த பொருளும் கூட. அதனாலேயே அயோடினை உப்பில் சேர்த்து வீடுகளில் சேர்க்கின்றனர்.
அயோடின் ஒரு நுண்ணிய உணவு. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் 'தைராக்ஸின்' ஹார்மோன் உதவுகிறது.
தைராக்ஸின் ஹார்மோன் செயல்பட உதவுவது அயோடின். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் அக்டோபர் 21, அயோடின் குறைபாடு தினமாக உலகமே அனுசரிக்கிறது. நீங்கள் அயோடைஸ்டு உப்பு சாப்பிட்டது போதும். வேறு சில உணவுகளின் மூலம் அயோடினைப் பெறலாம் என்று கூறி உங்களை சிலர்திசை திருப்பலாம்.
ஆனால் அது உண்மையென நம்பாதீர்கள். எல்லா மக்களுக்குமே அயோடினை மாற்றும் உணவின் மூலம் கிடைக்கப்பெறும் வசதியும் வாய்ப்பும் இருக்காது. அதனாலேயே அயோடைஸ்டு உப்பை உட்கொள்வது சிறந்தது எனப் பரிந்துரைக்கிறேன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -