அழகு சாதன பொருட்களின் ஆயுட் காலம் எவ்வளவு?
இங்கு அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் பலருக்கும் அது எப்போது காலாவதி ஆகிறது என்றே தெரிவதில்லை. அது தெரியாமல் அந்த பொருள் காலி ஆகும் வரை நீண்ட காலத்திற்கு உபயோகின்றனர். இது மிகவும் மோசமான சரும பிரச்சனைக்கு வழி வகுக்கலாம். எனவே உங்கள் அழகு சாதனப் பொருட்களை எத்தனை காலம் உபயோகிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
க்ளென்சர் - பெரும்பாலான ஃபேஸ் வாஷ்களோ, க்ளென்சர்களோ 1 ஆண்டு காலம் வரை நன்றாக இருக்கும். பிறகு அதனுள் எதாவது கட்டிகளோ அல்லது நிற மாற்றம் தென்பட்டால் அதனை உடனடியாக தூக்கி எறிந்திடுங்கள்.
மைசெல்லர் வாட்டர் - மைசெல்லர் வாட்டர் காற்றில் உள்ள கிருமிகளை எளிதில் பெருக்கக் கூடிய தன்மையை கொண்டுள்ளது. எனவே இதனை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது.
டோனர் - இதனை 6 முதல் 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இதன் நிறம் மாறினால் அது காலாவதி ஆகி விட்டதென அர்த்தம்.
மாய்ஸ்சரைசர் - பெரும்பாலான மாய்ஸ்சரைசர்கள் ஒரு வருடம் வரை நீடிக்கும். ஆனால் நீங்கள் ஆர்கானிக் மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்தினால் அவை 1 வருடத்திற்குள் காலாவதி ஆகி விடும்.
வாசனை திரவியங்கள் - உங்கள் வாசனை திரவியங்களை ஒழுங்காக ஸ்டோர் செய்து வைத்தால் அவை 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும்.