Coriander Mint Pulao Recipe : சத்தான சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தேடுறீங்களா..? கொத்தமல்லி புதினா ரெசிபி இதோ!
குழந்தைகள் சாப்பாட்டில் இருக்கும் கொத்தமல்லி, புதினாவை ஒதிக்கி வைக்கிறார்களா..? லஞ்ச் பாக்ஸிற்கு சத்தான உணவை சமைத்து கொடுக்கனுமா..? இரண்டிற்கும் ஒரே பதில் இந்த புதினா கொத்தமல்லி புலாவ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1 1/2 கப், இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பூண்டு - 5 பற்கள் நறுக்கியது, சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது, பச்சை மிளகாய் - 5 நறுக்கியது, துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை, புதினா இலை, தண்ணீர், நெய் - 2 மேசைக்கரண்டி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி, ஜாவித்ரி, பிரியாணி இலை, வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 கீறியது, தக்காளி - 2 நறுக்கியது, உப்பு - 1 1/2 தேக்கரண்டி, தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.பிறகு கொத்தமல்லி புதினா விழுது அரைக்க ஒரு மிக்ஸியில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், கொத்தமல்லி இலை, புதினா இலை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
ஒரு குக்கரில் நெய், எண்ணெய், சேர்த்து நெய் உருகியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி, ஜாவித்ரி, பிரியாணி இலை சேர்க்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு கொத்தமல்லி புதினா விழுதை சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து உப்பு, ஊறவைத்த பாஸ்மதி அரிசி, நீர் சேர்த்த தேங்காய் பால் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு 1 விசில் வரும் வேகவிடவும்.
கொத்தமல்லி புதினா புலாவ் மீது வறுத்த முந்திரியை தூவி சூடாக பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -