Kitchen Hacks :கிச்சனிலேயே ரொம்ப நேரம் செலவிட வேணாம்.. இதோ டிப்ஸ்..
சமையலறையில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்திற்கும் முதலில் தனி தனியாக இடத்தை வைத்திருப்பது முக்கியம். அடுத்து. நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சமையலறை பொருட்களையும் பயன்படுத்திய உடனேயே அவற்றின் இடத்தில் வைக்க வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியில் தேவையற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை நீக்கி விடவும். சமைத்த உணவுகள் எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டாம். காய்கறிகள், இறைச்சி, பழங்கள், பால், நட்ஸ், மசாலா உள்ளிட்டவற்றை வைக்கும் பழக்கம் இருக்கலாம்
மேலும், பழைய, காலாவதியான பொருட்களை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியேற்றுவது நல்லது. நீங்கள் இனி சாப்பிடவே மாட்டீர்கள் என்ற உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.
சமையலறையில் அவசியமானது, அவசியமில்லாதது என பிரித்து நிர்வகிக்க வேண்டும். எல்லாற்றிற்கும் தனி தனியே இடம் ஒதுக்குவது எவ்வளவு முக்கியமோ அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யவும் வேண்டும்.
சமையலறை கழிவுகளை உடனே சுத்தம் செய்வது நல்லது.ஒரு வேளை உணவு சமைத்தவுடன் அதனால் ஏற்படும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுவத்து நேரத்தை மிச்சமாக்கும்.
என்ன உணவு தயாரிக்க போகிறோம் என்பதை எல்லா வேளைக்கும் திட்டமிடுவது சிரமமாக இருந்தாலும் அதை செய்வது சமையல் அறையில் அதிக நேரத்தை செலவிடாமல் தடுக்க முடியும்.