Coconut milk pudding : தேங்காய் பிரியாரா நீங்கள்? இதோ இந்த தேங்காய் பால் புட்டிங் உங்களுக்காக..
நீங்கள் ஏராளமான புட்டிங்குகளை சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த தேங்காய் புட்டிங் புதிதாகவும் சுவையாகவும் இருக்கும். தேங்காய் புட்டிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் தேங்காய் துருவல் - 1 கப், பிரெஷ் கிரீம் - 200 மில்லி, சர்க்கரை - 1/4 கப், சைனா க்ராஸ், வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி, சோள மாவு - 3 தேக்கரண்டி, தண்ணீர் .
செய்முறை : முதலில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பேன்’னில் சைனா க்ராஸ் போட்டு அது கரையும் வரை கொதிக்க விடவும்.
மற்றொரு பேன்’னில் பிரெஷ் கிரீம் போட்டு, அதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். மேலும், இதில் வெண்ணிலா எசென்ஸ் மற்றும் கரைத்த சோள மாவு சேர்த்து கிளறவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் பால் ஊற்றி குறைந்த நெருப்பில் சூடாக்கவும்.
தேங்காய் பால் கலவை கெட்டியானதும், அடுப்பை அணைத்து, பரிமாறும் கப்'பில் ஊற்றி, 4 மணி நேரம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும். அவ்வளவு தான்! சுவையான தேங்காய் பால் புட்டிங் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -