Night Routine : இரவில் சாப்பிடக் கூடாத நார்ச்சத்து நிறைந்த பழங்கள்!
பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். சில பழங்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால் செரிமான சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசப்போட்டா பழத்தை ஒருபோதும் இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது. இந்தப் பழத்தை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.
கொய்யா பழம் குடல் இயக்கத்தில் அசௌகரியத்தை உண்டாக்கலாம். கொஞ்சம் கடினத்தன்மை நிறைந்த கொய்யா பழத்தை சாப்பிட்டால் வாய்வுப் பிரச்சனையும் வரலாம்
வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரையும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை, இரவில் சாப்பிட்டால் செரிமான அசௌகரியம் ஏற்படலாம். இதனால் நிம்மதியான தூக்கம் கெடலாம்.
ஆப்பிள் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருந்தாலும் அதிகளவு அசிடிட்டி இருப்பதால் ஏப்பம், நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணக் கோளாறு உண்டாகலாம்.
தர்பூசணி பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை நிறைந்துள்ளது. இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடலின் ஆற்றல் அதிகரித்து தூக்கம் கெடுக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -