To Prevent Fatty Liver: கல்லீரலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்த டயட்டில் இருக்க வேண்டிய உணவுகள்!
ஜான்சி ராணி | 29 Mar 2024 09:04 PM (IST)
1
உடல் உறுப்புகளிலேயே கல்லீரலின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள், கழிவுகள் ஆகிவயற்றை நீக்குவது; உணவு செரிமானத்திற்கு பிறகு உறிஞ்சிக் கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணி உள்ளிட்டவற்றை அயராது செய்து வருவதும் கல்லீரல் தான்
2
மதிய, இரவு உணவுகளில் 50 சதவீத காய்கறிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். சிறுதானிய உணவு வகைகள் உடல் நலனிற்கு நல்லது.
3
பப்பாளி, மஞ்சள், கீரை உள்ளிவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள் டயட் லிஸ்டில் இருக்கட்டும்.
4
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க பழக வேண்டும்.
5
காலை எழுந்ததும் மிதமான சூட்டில் எழுமிச்சை சாறு கலந்த தண்ணீர் அருந்தலாம்.