Mint, Cucumber sharbat recipe : வாட்டி வதைக்கும் வெயிலுக்கு புத்துணர்ச்சியூட்டும் புதினா, வெள்ளரி சர்பத்!
கோடை வெயில் வாட்டி வதைக்கிறதா..புத்துணர்ச்சி தரும் இந்த புதினா, வெள்ளரி சர்பத்தை வீட்டில் செய்து பாருங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : தண்ணீர், சர்க்கரை, புதினா இலை, வினீகர், வெள்ளரிக்காய், சோடா, ஐஸ் கட்டிகள்.
முதலில் ஒரு கடாயில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு புதினா இலைகள் சேர்த்து மீண்டும் 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அதன் பின், சிறிது வினீகர் சேர்த்து கொஞ்சம் கட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.கொதித்த உடன் வடிக்கட்டி ஆற விடவும்.
அதன் பிறகு, வெள்ளரிக்காய் எடுத்து தோள் உறித்து துருவி கொள்ளவும்.
இறுதியாக க்ளாஸில் முதலில் துறுவிய வெள்ளரிக்காய், புதினா, சர்க்கரை சிரப் சேர்த்து அதனுடன் சோட அல்லது தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். ஐஸ் சேர்த்து பருக தயாராகி விட்டது, புதினா, வெள்ளரி சர்பத்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -