✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Egg 65 recipe : புதுமையான வகையில் முட்டை சமைக்க வேண்டுமா? இதோ காரசாரமான முட்டை 65 ரெசிபி!

ABP NADU   |  10 Apr 2023 03:28 PM (IST)
1

முட்டை அனைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருளாகும். இது குறைந்த செலவில் நிறைய சத்துகளை தர வல்லது. இன்று முட்டையை வைத்து முட்டை 65 செய்வது எப்படி என்று காண்போம்.

2

முட்டை பொரிக்க தேவையான பொருட்கள் : அவித்த முட்டை 6, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிள்காய் 3, வெங்காயம் 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு, சீரக தூள், கரம் மசாலா, கடலை மாவு.

3

முட்டை 65 செய்ய தேவையான பொருட்கள் : எண்ணெய், வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், தக்காளி கெட்சப்.

4

செய்முறை : முதலில் வேக வைத்த முட்டையை எடுத்து தோள் உறித்து மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை கருவை மட்டும் வெட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதன் மேல் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு, சீரக தூள், கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

5

அதன் பின், அந்த கலவையினுள் கடலை மாவு சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து சிறு உருண்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

6

இப்போது, ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன் நிறமாகும் வரை வறுக்கவும். அத பின் மிளகாய் தூள் சேர்த்து குறவான நெருப்பில் கிளரி விடவும்.

7

தற்போது பொரித்து வைத்த முட்டைகளை இதனுள் சேர்த்து சிறிது தக்காளி கெட்சப் சேர்த்து புரட்டி எடுத்தால், சுவையான சுலவமான முட்டை 65 தயார். பின்குறிப்பு : கூடுதல் சுவைக்கு சூட்டுடன் உண்ணவும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Egg 65 recipe : புதுமையான வகையில் முட்டை சமைக்க வேண்டுமா? இதோ காரசாரமான முட்டை 65 ரெசிபி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.