Chettinad Vellai Paniyaram Recipe: சுவையான புதிய டிஃபன்..செட்டிநாடு வெள்ளை பணியாரம்..ரெசிபி இதோ..!
காலை ப்ரேக்ஃபாஸ்ட் உணவிற்கு என்ன செய்வது என்று யோசனையா?..இதோ இந்த புதிய செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்து அசத்துங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 3/4 கப், தண்ணீர், உப்பு - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு இரண்டையும் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து ஊறவைத்த பச்சரி,உளுத்தம்பருப்பு இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.அரைத்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு அரை கரண்டி மாவை எடுத்து கடாயின் நடு பகுதியில் ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். இறுதியாக கார சட்னியுடன் சூடான செட்டிநாடு வெள்ளை பணியாரத்தை பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -