Raisins Benefits : அடேங்கப்பா.. காய்ந்த திராட்சையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் நார்ச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக காய்ந்த திராட்சை உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த சோகையை தடுக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெரிமான செயல்பாடு பிரச்சினைகள், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது உதவும். காய்ந்த திராட்சையில் சர்பிடால் மற்றும் டைஹைட்ரோஃபெனிலிசாடின் போன்ற இயற்கை மலமிளக்கிகள் உள்ளன. இந்த கலவைகள் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கின்றன.
இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவுகிறது. காய்ந்த திராட்சையில் நிறைந்துள்ள கால்சியம் எலும்புகளுக்கு நல்லது.
இயற்கையான சர்க்கரைகள், கார்போஹைட்ரேட்டுகள் உள்ள இது, ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது
உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களும் குறைக்க நினைப்பவர்களும் காய்ந்த திராட்சை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம்
குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட இது, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -