Himalayan Salt : கல் உப்பா? இந்துப்பா? இதில் எது உடலுக்கு நல்லது?
கல் உப்பை விட இந்துப்பு உடலுக்கு நல்லது என்பதை பல பதிவுகளில் காணமுடியும். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாமலே மக்கள் அதை நம்புகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய கனிமங்கள் காணப்படுகின்றன. கல் உப்பில் காணப்படும் சத்துக்களே இதிலும் உள்ளன. இரண்டு வகையான உப்பிற்கும் சிறிதளவு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது.
இந்துப்பு குறைந்த சோடியம் அளவைக் கொண்டுள்ளது, இந்துப்பு உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்கிறது போன்ற தகவல்கள் எதுவுமே இன்னும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
இதய நோய், சிறுநீரக பாதிப்பு, ஆஸ்டியோபோரோசிஸ், புற்றுநோய் கொண்டவர்கள் இந்த உப்பை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது.
சமையலை தவிர்த்து, குளிக்கும் நீரில் இந்த உப்பை கலக்கலாம். இந்துப்பு கலந்த நீரில் குளித்தால் ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும்
பொடியாக்கிய இந்துப்பை பற்பொடியில் கலந்து பல் துலக்கலாம். அத்துடன் தண்ணீரில் இதை கரைத்து வாயை கொப்பளிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -