`பிறரை மகிழ்விப்பது மட்டுமே நோக்கம்’ - இந்த மனநிலையில் இருக்கும் பிரச்சினைகள் - நிபுணர்கள் சொல்வதென்ன?
பிறரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணமே ஒருவர் தான் பாதுகாப்பு இல்லாமல் உணர்வது, நிராகரிப்புகளைச் சந்திப்பது, சுயமரியாதை இல்லாமல் இருப்பது முதலான காரணங்களால் உருவாகிறது என்கின்ற உளவியல் நிபுணர்கள்.தனக்குள் போதிய மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதாலும், பிறரை மகிழ வைக்கக் கூடிய சிந்தனை தோன்றுகிறது.
பிறரின் அன்பைப் பெறுவது மட்டுமே மதிப்பு எனவும், அன்பு கிடைக்காமல் போனால் நீங்கள் தனித்துவிடப்படுவீர் என்ற எண்ணமும் சிறுவயதிலேயே விதைக்கப்படும் போதும், இப்படியான மனநிலை உருவாகும்.
பிறரை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்போரிடம் `செய்ய வேண்டிய பணிகள்’ என்ற பட்டியல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காலப் போக்கில் அனைத்து பணிகளையும் செய்து முடிக்க முடியாததால், மன அழுத்தம் ஏற்படும். அவர்களின் தேவைகளை மறந்து மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஆபத்தானது.
பிறரை மகிழ்விக்க விரும்புபோர் தொடர்ந்து தங்கள் மீதான கோபத்தைக் கொண்டிருப்பதால், அது தொடர்ந்து விரக்தியில் சென்று சேர்கிறது. இதனால் மூர்க்கத்தனம் உருவாகி அது செயலற்ற தன்மையில் செயல்படுகிறது. மேலும், இதன் காரணமாக பிறரின் மீது மறைமுகமாக கோபத்தை வெளிப்படுத்துவதும் நிகழ்கிறது.
பிறரை மகிழ்விப்பதில் கவனம் செலுத்துபவர்கள் தாங்கள் தங்களைப் பற்றிய உணர்வுகளையே இழக்கின்றனர். தன்னை பற்றி அறிதல் மிகவும் முக்கியமானது. பிறரை மட்டும் முன்னுறுத்தி தன்னுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது உளச் சிக்கலை ஏற்படுத்தும்.
தன்னை பற்றிய புரிதலும் தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது மிகவும் அவசியமானதாகும்.