Pudina Aloo Curry : சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்... புதினா உருளை கறியை ட்ரை பண்ணி பாருங்க...
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வேண்டும். இதில் சீரகம் மற்றும் கடுகு சேர்க்க தாளிக்க வேண்டும். 2.நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇஞ்சி-பூண்டு விழுது மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
இப்போது தக்காளி கூழ், மசாலா தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை மசாலாவை வேக வைக்க வேண்டும்
உருளைக்கிழங்கு சேர்த்து மசாலாக்களுடன் நன்கு படும்படி கிளறிவிட வேண்டும். இதை சுமார் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இந்த கலவையை ஒரு கொதிக்க விட வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து மூடி, உருளைக்கிழங்கு மென்மையாகும் வரை (சுமார் 10-12 நிமிடங்கள்) வேக வைக்க வேண்டும்.
இப்போது புதினா இலைகள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, மேலும் 2-3 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் சூடான புதினா ஆலூ கறி தயார். இதனை சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் பறிமாறினால் சுவையாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -