Cucumber Rice Recipe: லஞ்ச் பாக்ஸ் ரெசிபி..இதோ சுவையான வெள்ளரிக்காய் ரைஸ்!
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாய் நன்றாக சூடானது மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். தேவையான அளவு சேர்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் கடுகு, சீரகம், காய்ந்த சிகப்பு மிளகாய், உளுந்து, கருவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும்..
இதில் முந்திரி சேர்த்து கொள்ளவும். வேர்க்கடலையும் சேர்க்கலாம். அது நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், உப்பு, பெருங்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
வெள்ளரிக்காய் கொஞ்சம் வதங்கியதும் வேக வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். வெள்ளரிக்காய் ரைஸ் ரெடி.
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடத்தி அதிகரிக்கும்.
சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிக்காலாம். வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -