Protein Powder : ப்ரோட்டீன் பவுடர் உடலுக்கு நல்லதா? கெட்டதா?
உடல் எடையை அதிகரிக்க பலரும் எடுத்துக் கொள்ளும் ப்ரோட்டீன் பவுடர் நல்லதாக இருந்தாலும், அதை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதால் என்ன ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appப்ரோடீன் பவுடரில் நுண் ஊட்டச்சத்துக்கள் (Micro Nutrients) கிடையாது. உடலுக்கு தேவையான 70% ப்ரோட்டீனை, பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மூலம் எடுத்து கொள்ளவும். மீதமுள்ள 30% ப்ரோட்டீனை வேண்டுமானால், ப்ரோட்டீன் பவுடர் மூலம் எடுத்து கொள்ளலாம்.
ப்ரோட்டீன் பவுடரை தினசரி எடுத்துக் கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடற்பயிற்சி செய்யாதவர்கள் ப்ரோட்டீன் பவுடர் எடுத்து கொள்ளும் போது சிறுநீரகத்தில் கல் உருவாகலாம். மேலும் சிறுநீர் வழியாக சுண்ணாம்பு சத்து அதிகமாக வெளியேறலாம்.
உடற்பயிற்சி செய்பவர்கள் ப்ரோட்டீன் பவுடரை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். இது உடலின் அமில தன்மையாய் மாற்ற வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குறுகிய காலத்தில் அதிக படியாக ப்ரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். மருத்துவர்கள் அல்லது ஜிம் பயிற்சியாளரின் ஆலோசனையை கேட்ட பின், ப்ரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்ளலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -