Pedicure :சுத்தமான அழகான பாதங்களை பெற.... வீட்டிலேயே ஈசியா பெடிக்யூர் செய்யலாம்....
வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்ய, பெடிக்யூர் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பாதங்களில் அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகால்களில் உள்ள அழுக்குள் மற்றும் தொற்றுகள் நீக்க மசாஜ் செய்ய வேண்டும். கால்களில் கொஞ்சம் கிரீம் அல்லது தேனை கொண்டு மசாஜ் செய்யலாம்.
பின்னர் சூடான நீரில் எலும்பிச்சை சாறு கலந்து கால்களை சிறிது நேரம் அந்த தண்ணீரில் வைத்து மசாஜ் செய்யும் போது கால்களில் உள்ள அழுக்கள் விரைவாக சுத்தம் ஆகும்.
உங்களது தோல் மற்றும் நகங்கள் மென்மையாக மாறியதும், பிரஷ் மூலம் கால் நகங்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.வீட்டில் இருக்கும் பழைய பிரஷ்களை கொண்டு நகங்களை சுத்தம் செய்யலாம். பின்னர் பியூமிஸ் கல்லைப் பயன்படுத்தி குதிகால் மீது இறந்த சருமத்தை அகற்ற வேண்டும்.
கால் விரல்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், எலுமிச்சை துண்டுகளைக் கொண்டு கால்களில் தேய்க்கலாம். இதனையடுத்து, 1 டீஸ்பூன் எலுமிச்சை + 2 டீஸ்பூன் சர்க்கரை, ½ டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு பாதங்களை நன்றாக தேய்த்து மசாஜ் செய்து, மென்மையான துண்டினால் துடைக்க வேண்டும்
சூடான தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி சுமார் 5 நிமிடங்களுக்கு பாதங்களை மசாஜ் செய்யலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -