Diwali decoration 2023 : தீபாவளி வந்தாச்சு; வீட்டை ரம்மியமாக அலங்கரிக்க யோசனையா? இதைப் படிங்க!
மலர்கள் புத்துணர்ச்சியை தர வல்லது. ஓணம் விழாவின்போது அத்த பூ கோலம் போடுவது போல. தீபாவளியன்று பூக்களை கொண்டு தோரணங்கள் செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமஞ்சள் சாமந்தி, வெள்ளை சாமந்தி, ரோஜா மலர்களை அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். வீட்டின் முக்கியமான பகுதிகளில் பூக்களை கொண்டு கோலம் வரையலாம். விளக்குகள் வைக்கும் இடங்களில் பூக்களால் அலங்கரியுங்கள்.
தீபங்களால் ஒளிரும் நாள் தீபாவளி; தீபாவளி அன்று மாலை விளக்குகளால் வீட்டை அலங்கரித்தால் ரம்மியமாக இருக்கும். உறவுகள் சூழ தீபத்துடன் கதைப் பேசி கொண்டாடலாம்.
கண்ணாடி பாட்டில்கள், கண்ணாடி குடுவை அல்லது டம்ளரில் தண்ணீர் நிரப்பில் அதில் மிதக்கும் மெழுகுவர்த்திகளை எரியவிடலாம். பார்க்க அழகாக இருக்கும். இதிலும் வாசனை பரப்பும் மெழுகுவர்த்தியும் இருக்கிறது.
கடைகளில் கிடைக்கும் காகித அலங்கார விளக்குகளை வாங்கி உங்கள் வீடுகளை அலங்கரிக்கலாம்.
தீபாவளி அன்றைக்கு முந்தைய நாளே வீட்டை அலங்கரித்து வைப்பது நல்லது. மலர் அலங்காரம் இல்லாமல் மற்ற தோரணங்கள், வண்ண பெயிண்ட்களால் கோலம் வரைதல் உள்ளிட்டவற்றை முந்தைய நாளே செய்துவிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -