அடிக்கடி உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவரா...? ரத்த நாள சிதைவு ஏற்பட அதிக ஆபத்து..!
வளர்சிதை மாற்ற நோய்க்குறி (Metabolic Disease and Metabolic Syndrome) நமது உடலின் வெவ்வேறு உறுப்புகளில் பாயும் ரத்த நாளங்களை தனித்துவமான முறையில் பாதிக்கிறது என மருத்துவக் குழு ஒன்று தனது சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉதாரணமாக, கல்லீரல் மற்றும் கொழுப்பு திசுக்களில் உள்ள ரத்த நாளங்கள் அதிகப்படியான லிப்பிட்களை செயலாக்க போராடுகின்றன. அதேபோல் சிறுநீரகத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் வளர்சிதை மாற்ற நோயானது செயலிழப்பை ஏற்படுத்துகிறது.
அதேபோல் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் போக்குவரத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இப்படி ஒவ்வொரு உறுப்புக்குச் செல்லும் ரத்த நாளங்களிலும் இந்த வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்கள் வெவ்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன எனக் கூறப்படுகிறது.
இந்த ஆய்வு குறித்து முன்னதாகப் பேசிய மருத்துவர் ஓல்கா, எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சைகளை வழங்குவதற்காக இந்த ஆய்வை மேற்கொண்டதாகவும், உடல் பருமனின் மூலக்கூறு செயல்பாடுகளை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மோசமான உணவுகளால் ஒருவரது உடலில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள வளர்சிதை மாற்றம் தொடர்பான நோயை உண்டாக்கும் மூலக்கூறுகளை, ஆரோக்கியமான உணவின் மூலம் குறைக்க முடியுமா என்பது குறித்தும் இந்த ஆய்வில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான உணவானது உண்மையில் ரத்த நாளங்களின் மூலக்கூறு ஆரோக்கியத்தை ஓரளவு மட்டுமே மேம்படுத்த முடியும் என்றும், தவறான உணவுப்பழக்கத்தால் ரத்த நாளங்கள் சேதமடைவதாகவும் இந்த ஆராய்ச்சிக்குழு கண்டறிந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -