Poha Roti:எளிதான காலை உணவு - ஊட்டச்சத்து மிகுந்த அவல் ரொட்டி - ரெசிபி இதோ!
காலை உணவாக அவல் ரொட்டி செய்வது மிகவும் சுலபமானது. ஊட்டச்சத்து மிகுந்த உணவும் கூட..சிவப்பு அவல் வைத்தும் இதை செய்யலாம்.
தண்ணீரில் ஊறை வைத்த ஒரு கப் அவல் ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.
அதில், ஊற வைத்த அவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் அல்லது மிளகு தூள் உள்ளிட்டவற்றை சேர்க்கவும். தேவையெனில், இதோடு அரை கப் சோள மாவு, அரிசி மாவு அல்லது கோதுமை மாவு என ஏதாவது ஒன்றை சேர்க்கலாம்.
சப்பாத்தி மாவு போல பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
மாவு கலவையை உருண்டையாக உருட்டி, ரொட்டி போல தட்ட வேண்டும்,
தோசை கல்லை மிதமான தீயில் வைத்து நெய் தடவி ரொட்டியை போட்டு நன்றாக வேகும் வரை திருப்பி போடவும்.
ரொட்டி பொன்னிறமாக மாறியதும் அவல் ரொட்டி ரெடி. இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி, புதினா சட்னி என எதுவாக இருந்தாலும் சேர்த்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.