Pineapple Rava Paniyaram : அன்னாசி பழத்தில் பணியாரமா? எப்படி செய்வதென்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் : அன்னாசி துண்டுகள், 1/2 கப் ரவா, 1/4 கப் மைதா, சர்க்கரை 6-8 டீஸ்பூன், 1 டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய், 2 டீஸ்பூன் தயிர், 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள், உப்பு , 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1/4 கப் பால்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் அன்னாசி பழத்தை தோலை சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
அடுத்தது ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா மாவு, சர்க்கரை, நெய், தயிர், ஏலக்காய் தூள், உப்பு, சோடா உப்பு, பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்தது பணியார கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெயை சேர்க்கவும்
எண்ணெய் காய்ந்ததும், சர்க்கரை மற்றும் அன்னாசி பழத்தை ஒவ்வொரு குழியிலும் சேர்த்து வேகவிடவும்.
அடுத்தது கலந்து வைத்துள்ள மாவை பணியார அன்னாசி பழத்தில் மீது ஊற்றி பொன்னிறமாக இருபுறமும் வேகவைத்து எடுத்தால் சுவையான அன்னாசி ரவை பணியாரம் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -