Beauty Tips: இரவு நேர சரும பராமரிப்பு மிகவும் அவசியமா? நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!
இரவு நேர சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இரவில் உடல் முழுவதும் ஓய்வெடுக்கும் வேளையில் தசைகள், தோல்கள் அவற்றின் வேலைகளை செய்யத் தொடங்குகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுளிர்காலம் என்றால் சருமம் வறண்டு .எண்ணெய் தன்மையற்று ஒரு சாம்பல் நிறத்தில் ஒரு பளபளப்பற்ற தன்மையில் இருக்கும். ஆகவே இவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் இரவு நேரத்தில் சரும பராமரிப்பு என்பது மிகவும் அவசியமென கூறப்படுகிறது.
எண்ணெய் பிசுக்குடன் இருக்கும் சருமத்தை சரி செய்ய சிறந்த நைட் கிரீம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இரவில் முகத்தை சுத்தம் செய்து நைட் கிரீம் பூசி தூங்கச் செல்வது முகத்தை பளபளப்பாகவும் சுருக்கம் இல்லாமல் வைத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.
தூங்கும் போது தோல் இறந்த செல்களை எல்லாம் வெளியேற்றி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. இதை மனதில் வைத்து, படுக்கைக்கு செல்லும் முன் முகத்தை கழுவி சுத்தம் செய்து நைட் க்ரீம்களை பூச வேண்டும்.
இரவு நேரத்தில் சருமத்தை பராமரிப்பதால் நேர்மறையான மாற்றங்கள் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்.
இரவு நேர சரும பராமரிப்பின் முதல் படியாக முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை சுத்தமாக நீக்க வேண்டும். முகம் நன்கு சுத்தமாகும் வரை தண்ணீர் அல்லது மேக்கப் ரிமூவரைக் கொண்டு முகத்தை முழுவதுமாக துடைக்க வேண்டும்.
எண்ணெய் சருமத்திற்கு, ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவும் மாண்டலிக் அமிலம் , அசெலிக் அமிலங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலத்தைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிகவும் வறண்ட சருமத்திற்கு, பாலிஹைட்ராக்ஸி அமிலங்கள், லாக்டிக் அமிலம் அல்லது கிளைகோலிக் அமிலம் குறைந்த கிரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை ஹைட்ரேட் செய்யவும் புதுப்பிக்கவும் உதவுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -