Herbal Tea: PCOS பிரச்னையை சமாளிக்க உதவும் ஹெர்பல் டீ லிஸ்ட் இதோ!
புதினா டீ - ஹார்மோன் சீரற்றதன்மையை குறைக்க உதவுகிறது. இளஞ்சூட்டில் தினமும் புதினா டீ குடிப்பது நல்லது. இதோடு எலும்பிச்சை பழச் சாறும் சேர்க்கலாம்.
உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக்கொள்ள இந்த கிரீன் டீ சிறந்த சாய்ஸ். இதில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட் தன்மை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
அதிமதுரத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அது பி.சி.ஓ.எஸ்.-க்கு எப்படி உதவுகிறது என்றால், உடலில் டெஸ்டோரெசன் அளவை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.
லவங்கப்பட்டை டீ, இரத்தத்தில் அதிகளவு சர்க்கரை சேர்வதை குறைக்கிறது. இது குறைந்த கலோரி என்பதாலும், தினமும் இரண்டு முறை இந்த டீ குடிக்கலாம்.
பி.சி.ஓ.எஸ்., காரணமாக உடலில் குறையும் ஈஸ்டோரெஜன் அளவை சீராக்க இந்த இஞ்சி டீ உதவுகிறது.
உடலில் ஹார்மோன் சீரின்மையால் ஏற்படும் மாற்றங்களை உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சரிசெய்யலாம். இது பொதுவான தகவல் மட்டுமே.மருத்துவரை அணுகி அறிவுரை பெறுவதே நல்லது.