Papaya Benefits: டெங்கு காய்ச்சல் சிகிச்சை முதல், முடி கொட்டும் பிரச்சனை வரை.. பப்பாளியின் முக்கிய நன்மைகள் என்ன?
பப்பாளி இலைச் சாறு, பப்பாளி தேநீர், பப்பாளி மாத்திரைகள் மற்றும் பப்பாளி பழச்சாறு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபப்பாளியில் இயற்கையாகவே அதிக அளவு சத்து நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே உகந்த பழம் இது. இதை சாப்பிடுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
பப்பாளி இலையின் குறிப்பிடத்தக்க குணங்களில் ஒன்று அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பாகும். பப்பாளி இலை சாறு குடிப்பது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது,
இது டெங்கு காய்ச்சல் போன்ற நோய்த்ட்தொற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பப்பாளி இலையில் பப்பெய்ன் மற்றும் சைமோபப்பைன் போன்ற என்சைம்ஸ் நிறைந்துள்ளது.
இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி பொடுகு மற்றும் முடி கொட்டும் பிரச்சனைக்கும் தீர்வாக உள்ளது.
பப்பாளி இலையில் ஏராளமான புரோட்டீனை கரைக்கும் என்சைம்கள் உள்ளன, அவை சருமத்தில் தேய்த்தால் இறந்த சரும செல்களை அகற்ற உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -